இந்தியப் புவிக் காந்தவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பூமியின் காந்தகப் புலத்தில் உள்ள மின்புலக் கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக திரவ ஒப்புருவாக்கக் குறியீட்டை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆய்வானது எதிர்கால விண்வெளித் திட்டங்களைத் திட்டமிடுவதற்கு உதவ இருக்கின்றது.
சூரியன் பிளாஸ்மாவின் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றது. இது பூமியைச் சுற்றிலும் பிளாஸ்மாவைக் குவித்து வைக்கிறது.
இது தனது சூரிய ஒளிக் காற்றின் மூலம் பூமியை நோக்கி பிளாஸ்மாவை நகர்த்துகின்றது.
சூரிய ஒளியின் காந்தப் புலத்தினால் கொண்டு வரப்பட்ட கிரகங்களுக்கிடையிலான காந்தப் புலத்தை இது உருவாக்குகின்றது.
பூமியின் காந்தப் புலம் மற்றும் கிரகங்களுக்கிடையிலான காந்தப் புலத்தின் இடையீடானது பூமியின் காந்தப் புலத்தை உருவாக்குகின்றது.
பூமியின் காந்தப் புலமானது விண்ணில் சுழன்றுக் கொண்டிருக்கும் ஏராளமான செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது.
காந்தப்புலம் பற்றி
இது ஒரு கிரகத்தின் காந்தப் புலப் பகுதியினால் மேலாதிக்கம் செய்யப் பட்ட பகுதியினைச் சுற்றியுள்ள பகுதியாகும்.
பாறைநிலம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களைக் காட்டிலும் புவியானது வலுவான காந்தப் புலத்தைக் கொண்டுள்ளது.
இப்பகுதி புவியின் உள்ளகப் பகுதியின் வெளிச் சுவட்டின் சமதளப் பகுதிக்கும் வெகுமளவில் அடியிலிருந்து உருவாகிய உருகிய இரும்பு மற்றும் மின்னூட்டம் செய்யப்பட்ட வெப்பச் சலன இயக்கம் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.